Friday, 30 May 2014

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?
அப்ப இத மறக்காம படிங்க !!
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
COPY & PASTE THIS LINK
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service
Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.
அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும்
அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
மறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.
குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.
நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும்
நேரத்தை நன்கு குறித்து கொண்டு,
அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,
அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...
நாள் மட்டும்தான் உண்மை,
முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...
கால் கடுக்க நிற்க வேண்டும்,
ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

Thursday, 29 May 2014

பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெற

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

Sunday, 25 May 2014

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்

எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். - ஐன்ஸ்டைன்

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! - நேதாஜி

உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்.

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்

Saturday, 24 May 2014

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு.

இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன....
சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்....!!

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

Tuesday, 6 May 2014

புளூடூத் - WiFI : தெரிந்ததும், தெரியாததும் !


புளூடூத் - WiFI : தெரிந்ததும், தெரியாததும் !
WiFI -wireless fidelity என்பது,என்ன?
கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அதற்கு முன்பு வைஃபை(WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network ஆகும்.
கணினி – இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.
WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.
அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.
Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.
WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்..
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடாக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, இரண்டாவது அல்லது பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது.
இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.
அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வேக் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.
ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.
இதை ரௌடர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.
இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.
இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும்.
செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும்.
அது போல் ஆகக் கூடிய பரிமாற்றம் 802.11g இணைப்பில் 54 Mbps ஆக இருக்க முடியும்.
இந்த WiFi முறை தனியாக கணினி மட்டுமல்லாது, Bluetooth, smartphone, Keyboard,Mouse,சில வீட்டு தொலைபேசிகள் போன்ற பலவற்றிலும் பாவிக்கப்படுகிறது.
ஒரே இடத்தில் பல அறைகளுக்கிடையிலும்,
வாகனங்களில் இருந்து அருகே உள்ள கணினிகளுடன்,அலுவலகங்களில் மற்றும் பொது இடங்களிலும்(Public Hotspot) இணைய இணைப்பைப் WiFi மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மடிக்கணினி நன்கு உபயோகமாக இருக்கும்.
ஒருவரின் WiFi ஐ, வேறொருவர் பாவித்துக் கொண்டிருந்தால், அவருடைய இணைய இணைப்பின் வேகம் குறைவடையும்.
அதை வைத்து யாராவது நமது இணையத்தைப் பாவிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும்.
மற்றவர்கள் WiFi இணைப்பைப் பெற அவர்களின் கடவுச்சொல் தேவைப்படுகிறது.
இதைப் பெற crack செய்பவர்கள்,சில மென்பொருட்களைப் பாவிப்பவர்கள் என வேறுபடுகிறார்கள்.
இந்த பாஸ்வேட்களை திருடாமல், WirelessKeyView என்ற மென்பொருளின் மூலம்,பாஸ்வேட் இல்லாமலேயே பாவிக்க முடியும்.
அதாவது crack செய்ய வேண்டியதில்லை.
அத்துடன் வேறு சில முறைகளில் மென்பொருட்களை பாவிக்காது, பாஸ்வேட் இல்லாமல் WiFi மூலம் இணைப்பை பெற முடியும்.
வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்:
(Imperfections in the WiFi network:)
Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.
அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம்.
இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட முடியும். .
உதாரணமாக சொல்வதெனில் சமீபத்தில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக் செய்து அவருடைய கணினியின் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது.
வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது.
அதாவது ஒயர்லஸ் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வான்வழியே தகவல்களை அனுப்புவதால் அதனை தடுத்து ஹேக் செய்து சுலபமாகிறது.
அத்தகவல்களை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒரு நெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய்வது சுலபமாகிறது.
தடுக்கும் வழிகள்:
(ways to stop Hacking)
வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless admin password)நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.
அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெயருடன் 12345 என இருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.
உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது.
வளாகத்தின் மையப்பகுதியில் ஒயர்லெஸ் அணுகள் இடத்தை வைப்பது நல்லது.
சுவர் அல்லது சுவற்றின் மூளைகளில் வைப்பதால் கசிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய இணைய நெட்வொர்க்குகளை பிறர் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
புளூடூத்
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம்.
ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ?
அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ?
சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம்.
அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான்.
“அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை.
நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும்.
இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு.
இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன்.
ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள்.
பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் !
அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள்.
இதுவே சுருக்கமான பெயர் புராணம் !
புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும்.
அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே.
அது நமக்குத் தெரிந்தது தான்.
உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான்.
இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே.
அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர்.
வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள்.
நல்லது !
புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு.
அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும்.
பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது.
சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன.
இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள்.
ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது.
பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது.
வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன.
இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள்.
அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும்.
ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார்.
அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும்.
இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும்.
இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும்.
இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ
செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும்.
“ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும்.
ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது !
சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம்.
இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும்.
இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும்.
இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும்.
மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !
புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே.
மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம்.
அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன.
கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர்.
அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர்.
அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.
எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம்.
இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது !
அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது.
இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு.
ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று !
இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.
எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை.
இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும்.
இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது.
அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.
புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை.
ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது!
மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

Friday, 2 May 2014

FORGIN JOB வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்ஆர்டி, எம்இஏ, தூதரக அனுமதி பெறுவது எப்படி?

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்ஆர்டி, எம்இஏ, தூதரக அனுமதி பெறுவது எப்படி?

செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம், பொது வழி (தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
தேவையான டாகுமெண்டுகள்:
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை. கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in
And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
————–
Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
—————-
Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244
.
வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்ஆர்டி, எம்இஏ, தூதரக அனுமதி பெறுவது எப்படி?

செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம், பொது வழி (தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)

தேவையான டாகுமெண்டுகள்:

1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்

2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்

3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்

4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)

எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை. கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in

And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
————–
Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
—————-
Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244
.நன்றி :இனியவன் தஞ்சை