Sunday 13 January 2019

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் பிஎஃப் கணக்கில் பணத்தை செலுத்துகிறதா? கண்டறிவது எப்படி?

 உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை ஈபிஎஃப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற இணைப்பிற்குச் சென்று UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பின்னர் உங்கள் உங்கள் பிஎஃப் ஐடி எண் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் ஈபிஎஃப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய முடியும்.சிலசமயம் விலக்கு பெற்ற நிறுவன உறுப்பினர்களின் ஐடி-க்கான பாஸ்புக் இல்லை என்ற தகவலும் தோன்றும்.

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு விலக்கு உள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி?

ஈபிஎஃப்ஓ இந்தியா தளத்திற்குச் சென்று டேஷ்போர்டை தேர்வு செய்து அதில் உள்ள MIS என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அலுவலகம் என்ற டேபில் உள்ள Establishment Search என்பதை கிளிக் செய்யவும்.அடுத்து தோன்றும் இணையப் பக்கத்தில் நிறுவனத்தின் பெயர் மற்றும் கேட்சா குறியீட்டை உள்ளிட்டு விலக்கு உள்ளதா? என்று சரிபார்க்கலாம். உங்களுக்கு நிறுவனத்தின் குறியீட்டு எண் இருந்தால் அதையும் உள்ளிடவும். நிறுவனத்திற்கு விலக்கு இருந்தால் PF: EXEMPTED என்று தகவல் தோன்றும்.

விலக்கு பெற்ற அல்லது பெறாத நிறுவனங்கள் பிஎஃப் பணத்தை டெபாசிட் செய்கிறதா என்பதைக் கண்டறிவது எப்படி?

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் விலக்கு பெற்றதா என்று கண்டறிந்த உடன் அதன் வலதுபுறத்தில் இருக்கும் “View Payment Details” என்ற இணைப்பு இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் பெயரை தேர்வு செய்வதன் மூலம் பிஎப் பணத்தை நிறுவனம் டெபாசிட் செய்துள்ளதா என்று பார்க்கலாம்

No comments:

Post a Comment