தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
கட்டற்ற
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில், செஞ்சி, தஞ்சை, மதுரைஆகிய தமிழ்நாட்டு நகரங்களில், நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.தஞ்சையில் கி.பி.
1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
செஞ்சியில் கி.பி.
1526-இல் தொடங்கியது; மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்து, பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள்.
1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.
பொருளடக்கம்
[மறை]
- 1தஞ்சை நாயக்கர்கள்
- 2மதுரை நாயக்கர்கள்
- 3மதுரையை ஆண்ட
நாயக்க மன்னர்களின் வம்சவழி
- 4திருமலை நாயக்கர்
- 5சொக்கநாத நாயக்கர்
- 6முத்து வீரப்ப நாயக்கர்
- 7இராணிமங்கம்மாள்
- 8மேற்கோள்கள்
- 9இவற்றையும் கான்க
- 10உசாத்துணை
- 11வெளி இணைப்பு
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சையும் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. சுல்தானின் பிரதிநிதியாக இருந்த ஏகோஜி இந்தப் பகுதிகளை அரசாண்டான். இந்த ஏகோஜி மராட்டிய சிவாஜியின் தம்பியாவான். சுல்தானின் மறைவுக்குப் பிறகு ஏகோஜி தஞ்சையில் மராட்டிய ஆட்சியை நிறுவினான்.
- 1532 - 1560 சேவப்ப நாயக்கர்
- 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
- 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
- 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்
கம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிவுபெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி.
1529 இல் மதுரை ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. இவரே பாளையப்பட்டு ஆட்சிமுறையை வலிவு கொண்டதாக மாற்றி அமைத்தார். 72 பாளையப்பட்டுகளின் பொறுப்பில் நாட்டின் பகுதிகள் ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றன. பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கர்க்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும். விசுவநாதருக்குப்பின் நாயக்க மன்னர் பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் புகழ்மிக்கவர்கள் திருமலை நாயக்கர், சொக்கநாதநாயக்கர், இராணிமங்கம்மாள் என்ற மூவராவர்.
ஆட்சி காலம் ஆண்ட நாயக்க மன்னர்கள்
- 1529 - 1564 விசுவநாத நாயக்கர்
- 1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
- 1572 - 1595 வீரப்ப நாயக்கர்
- 1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
- 1601 - 1609 முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்
- 1609 - 1623 முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)
- 1623 - 1659 திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன்)
- 1659 - 1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்
- 1659 - 1682 சொக்கநாத நாயக்கர்(இராணிமங்கம்மாள் கணவர்)
- 1682 - 1689 அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்
- 1689 - 1706 இராணி மங்கம்மாள்(சொக்கநாதரின் மனைவி)
- 1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (சொக்கநாதரின் மகன்)
- 1732 - 1736 இராணி மீனாட்சி (விஜயரங்கநாதரின் மனைவி)
இவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரைநாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர். தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார். திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார். மைசூர், திருவனந்தபுரம் ஆகிய அரசுகளை இவர் வென்றார். விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார். இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம், சிவகங்கை, திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது. சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார்.
நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மன்னர் சொக்கநாத நாயக்கர். இவர் 23 ஆண்டுகள் மதுரைநாட்டை ஆண்டார். இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன. தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக்கூறுகளும் தமிழகத்திற் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது; பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார். விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார். சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர் களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய குதிரைப் படைத்தலைவரால் விடுவிக்கப்பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்; பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர். எனவே அவர்காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது.
சொக்கநாத நாயக்கர்- இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச்செருப்பைத் தன்காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள்.
இராணிமங்கம்மாள்[தொகு]
சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவனந்தபுரப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள்ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர். தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்னும் உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது ராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு (சாதி ) இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள்
. பலிஜா, கவரா ,
வளையல் நாயக்கர் , தொட்டிய நாயக்கர் போன்றோர் காப்பு இனத்தில் உள்ள கிளை ஜாதியினர்.[சான்று தேவை]
பொருளடக்கம்
[மறை]
- 1பூர்வீகம்
- 2மக்களின் இயல்பு
- 3கிளைகள்
- 3.1வீட்டு வகைப் பிரிவுகள்
- 3.2இர்ரி வீட்டு வகை
- 3.3கொடையானி பொம்மு வீட்டு வகை
- 3.4காடேரி பொம்மு ( பாலமண்ண வகை )
- 3.5குஜ்ஜ பொம்மு வகை
- 3.6கம்பராஜு வீட்டு வகை
- 3.7எரமாசி சின்ன பொம்மு வீட்டுவகை
- 3.8மங்கராஜு வீட்டு வகை
- 3.9கலிமு சோமு வீட்டு வகை
- 3.10குரிமாசி வீட்டு வகை
- 3.11சில்லண்ண வீட்டு வகை
- 4திருமணம்
- 4.1முதல் நாள்
- 4.2இரண்டாம் நாள்
- 4.3மூன்றாவது நாள்
- 4.4திருமண விருந்து
- 4.5நல்ல நேரம் , கெட்ட நேரம்
- 4.6திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு
- 5குழந்தைப்பிறப்பும் சடங்குகளும்
- 6இறப்பு சடங்கு
- 7மக்கள் தொகை
- 8குல தெய்வங்கள்
- 9குழு வாழ்க்கை
- 10நாட்டு புற
பாடல்களில்
- 11தேவராட்டம்
- 12ராஜபாளையம் நாய்
- 13குறிப்பிடத்தக்க நபர்கள்
- 14மேற்கோள்கள்
பூர்வீகம்[தொகு]
இவர்கள் ஆந்திரம் கர்நாடகம் எல்லையில் துங்கபத்திர நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி என்னும் நகரத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளனர் . இவர்கள் தெலுங்கு , தமிழ் கன்னடம் கலந்த மொழியில் பேசுவர் . பெரும்பாலும் தெலுங்கு வார்த்தைகளை கொண்டு தான் இருக்கும் . இவர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துகொண்டு இருந்தநிலையில் இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்களிடம் பெண்கேட்டு வந்ததாகவும் அதனால் தமிழகம் நோக்கி வந்தனர் என்று இவர்கள் கூறுகிறார்கள் . இவர்கள் மேற்கு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர் . கொங்கு நாடு மற்றும் மேற்கு மதுரை பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டனர் இதில் தெலுங்கு பேசும் நாயுடு ரெட்டி கம்பளத்தார் தொட்டியர் என்றும் கன்னடம் பேசும் அனுப்பர் ஒக்கில்லியர் காப்பில்லியர் குரும்பர் ஆகிய கம்பளகவுண்டர்கள் அட்டியர் என்றும் தங்கள் பட்டிக்கு பெயரிட்டு வாழ்ந்து வந்தனர் இதில் அனுப்பகவுண்டர்கள் தமிழ்நாட்டில் 60 க்கும் மேற்பட்ட அரண்மனைகளை கட்டி ஆண்டனர் அப்படி ஆண்ட அரண்மனைகளில் ஒன்று வெள்ளியங்குன்றம் அரண்மனை அந்த ஜமீன் பரம்பரை அன்றிலிருந்து இன்றுவரை மதுரை அழகர் கோவில் ஆபரண பாதுகாப்பு பணியைச் செய்து வருகிறது கம்பளத்தார்களின் தலைமை ஸ்தானமாக இருந்தவர்கள் ஸ்ரீஒன்னம்மாள் தொட்டராயர் ஆகும் இவர்களே அனுப்பகவுண்டர்களின் குல தெய்வம் கம்பளத்தார்களின் அடையாளம் உருமிமேளம் இலந்தமுள் கோட்டை மங்களபாடல் நடுகல் வழக்கம் கருப்பு தாலிகயிறு ஆகும்.[1][சான்று தேவை]
ஆங்கிலேயர் ஒருவர் இம்மக்களின் இயல்புகளை தனது ஆராய்ச்சி நூலில் தெரிவித்துள்ளார் . இவர்களின் வீரம் ,நேர்மை , தியாகம் தான் நாயக்கர் ஆட்சி அமைய அடிப்படை காரணம் என்று தெரிவித்துள்ளார் . மாந்தரிகம் , குறிசொல்லுவது போன்றவற்றில் திறமையானவர்கள் . இவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் என்று ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள் .[2] [சான்று தேவை]இவர்கள் பிற காப்பு இனத்தவர்களான பலிஜா , கவரா போன்றோர்களுக்கு மதகுருவாகவும் , இருந்து வந்துள்ளனர் . இவர்கள் ஊர்களில் ஒழுக்கத்தை பராமரிக்கும் பொறுப்பிலும் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர் .[3]
கிளைகள்[தொகு]
இவர்கள் காப்பு இனத்தில் இருப்பதை போலவே தங்கள் குணாதிசயங்களை வைத்தும் , பழக்க வழக்கத்தை வைத்தும் பிரிவுகளை பிரித்துள்ளனர் .இவர்கள் ஒன்பது கம்பளமாக தங்கள் இனத்தை பிரித்துக்கொண்டுள்ளனர் . ஆனால் மூன்று கிளைகளுக்குள் இவர்களின் பிரிவு வந்துவிடுகிறது .
தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் :
- கொல்லவார்(குண்டலவரு ரேவலவரு மன்னுலவரு அலுவலவரு செளுப்பவரு சொளியவரு )
- வேகிளியார் ( சில்லவார் , பாலமகாரு)
- தோகளவார் ( முதாவுலுவார் )
கன்னடம் பேசும் அட்டியகவுண்டர்கள் :
- அனுப்பர் கவுண்டர்
- கப்பில்லியர்
- ஒக்கலிகர்
- குரும்பர் [4]
ராஜகம்பளத்தார்களின் உட்பிரிவுகள் 11 வீட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட உட்பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கொல்லவார் வீட்டு வகை=== (குண்டலவரு ரேவலவரு மன்னுலவரு அலுவலவரு செளுப்பவரு சொளியவரு )
காடேரி பொம்மு வீட்டு வகை தம்மிசிலி கேங்கிசிலி
கொல்லவார் வீட்டு வகை=== (குண்டலவரு ரேவலவரு மன்னுலவரு அலுவலவரு செளுப்பவரு சொளியவரு )
- கண்ணடிர்ரி
- தாத்திர்ரி
- போற்றிர்ரி
- கூசமிர்ரி
- பாசமிர்ரி
- பந்திர்ரி
- ஏமிர்ரி
- எனுமிர்ரி
- நாயிர்ரி
- குண்டானி கொடையானி
- கோட்டண்ண கொடையானி
- பிதுரண்ண கொடையானி
- புவ்வுல கொடையானி
- உக்கம கொடையானி
- திம்மிசி கொடையானி
- சில்ல கொடையானி
- தம்முசி
- முட பாலம்
- உண்டாடி பாலம்
- கட்டாறி பாலம்
- கெங்கிசி பாலம்
- காட்டேரி பாலம்
- சாம பாலம்
- சல்லூறு பாலம்
- தூணாக்கோல் பாலம்
- ஆலமபாலம் ( அழகர் பாலம் )
- மல்ல பாலம்
- குரி பாலம்
- எகநாகி பாலம்
- திகநாகி பாலம்
- போட பொம்மு
- பொட்டக பொம்மு
- பீலி பொம்மு
- பிக்கா பொம்மு
- சல்லி பொம்மு
- குல்லி பொம்மு
- எரமிசி பொம்மு
- எரகினி பொம்மு
- குந்திலி பொம்மு
- குலகட்ட பொம்மு
- பங்கு பொம்மு
- பங்காரு பொம்மு
- கசிகிலி பொம்மு
- குசிகிலி பொம்மு
- கோனண்ண
- கெத்தண்ண
- சில் பொம்மு
- எரமாசி
- கமண்ண
- பீரண்ண
- சக்கிடண்ண
- கொடுக்கண்ண
- சருக்கண்ண
- காட்டண்ண
- மேக்கலண்ண
- நல்லிமண்ண
- உட்பிரிவுகள் தெரியவில்லை
- பெத்தொட்டி காட்டையா
- சிவகாணி பாலப்பா
- வந்த பாலமுத்து
- எரசில்ல
- நலசில்ல
- பூத்தமசில்ல
- பூத்தனாகாச்சி சில்லா
- நாரமுத்து சில்ல
- தும்பி சில்ல
- கோண சில்ல
- உப்பிடி சில்ல
- பொந்து சில்ல
- கொடை சில்லா
அனுப்பக்கவுண்டர்கள் கிளைப்பிரிவு 64 ஆகும் கோவோரு, பொட்டியோரு, கொண்டியோரு, கெப்பதேரு, கொண்ணையோரு, கட்டியோரு, அங்கதோரு, அவிஞ்சோரு, உனக்கையோரு, சக்கினோரு, சுருகியோரு, போழியோரு, பெள்ளேரு, பிரிஞ்சோரு, பிக்கலோரு, பூச்சியோரு, பெரினியோரு, போசியோரு, பொக்கிசோரு, பெல்லதேரு, மந்தியோரு, மன்னியோரு, முப்பிச்சோரு, துமிக்கலோரு, துண்டதோரு, எடனோரு, எம்மையோரு, துடிக்கலோரு, தொன்னையோரு, தொம்பிலியோரு, நன்னியோரு, நொனந்தோரு, சோளோரு, சந்தனோரு, சவுடியோரு, சலக்கியோரு, சன்னோரு, சானியோரு, சல்லியோரு, சங்கியோரு, சிக்கலோரு, காளிஜோரு, கடிஜோரு, கோணியோரு, அக்கலதோரு, ஆவினோரு, ஆனையோரு, உள்ளோரு. உரலோரு, துருவியோரு, துப்ணதோரு, தொட்டியோரு, தாரியோரு, எகடோரு, ஏரியோரு, பண்ணையோரு, பானோரு, பாட்ஜோரு, மாரிஜோரு, இடுக்கலோரு, ஓம்ஜோரு, ராம்ஜோரு, நக்கலதோரு, தாசனோரு என வகைப்படும் இவை அனைத்தும் கன்னடச் சொற்களே இதில் 1 முதல் 32 கிளை வரை உள்ளவர்கள் அண்ணன் தம்பி முறை 33 முதல் 64 கிளை வரை உள்ளவர்கள் அண்ணன் தம்பி ஆகும் 1
to 32 அண்ணன் தம்பி[சான்று தேவை]
33 to 64 அண்ணன் தம்பி 1
to 32 வரை உள்ளவர்கள் 33 to 64 வரை உள்ளவர்கள் சம்மந்தி முறை ஆகும்
திருமணம்[தொகு]
இந்த குலத்தினரிடையே, திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வதும் நடக்கிறது.
- இர்ரி மாது - கொடையானி பொம்மு சில்ல
- காடேரி பொம்மு - குஜ்ஜ பொம்மு
- கம்பராஜு - எரமாசி சின்ன பொம்மு
- மங்கராஜு - கலிமுசோமு
- பல்லகதொப்பு - நூட்ட குமாரலு
பசுப்பு கொட்டந்து' மஞ்சள் அரைக்கும் சடங்கு நடக்கும். இதில் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்வர் . உரிமியை மாலாடு என்ற இனத்தவர் இசைப்பார், தெலுங்கு திருமண பாடல்களை பெண்கள் பாடுவார்கள் , உரிமி இசைக்க பாட்டு பாட மஞ்சள் இடிக்கும் ( அரைக்கும் ) சடங்கு நடக்கும் .
திருமண நாள் முதல் நாளில் தொடங்கிய திருமணம் பல்வேறு சடங்குகளை கொண்டு இரண்டாம் நாளும் நடைபெறும் . திருமணம் இரவு நேரங்களில் தான் நடப்பது இவ்வினதவர்களின் வழக்கம் . திருமணத்தின் பொது பிற இனத்தவர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள் . ஊரின் மந்தையில் அவரை பூ , அரச மர இலை, வேப்ப மர இலை , புங்கை மர இலை போன்றவற்றில் குடில் அமைப்பர் . மணமகன், மணமகளுக்கு தனி தனி குடில் அமைத்து தேவராட்டம் போன்ற ஆடல்களை ஆடுவர். ஊர் பெரியவர்
"சாலி பெத்து முன்னிலையில் தான் திருமணம் நடக்கும். பிராமணர்கள் , ஆரிய சடங்கு முதலியவை இம்மக்களால் இன்றளவும் ஏற்று கொள்ளப்படவில்லை .
இரவு நேரத்தில் தெலுகு மொழியில் பாட்டு பாட, உரிமி இசைக் , பெண்கள் குலவை இட மாலை மாற்றி கொள்வர். தாலி கட்டும் வழக்கம் இம்மக்களிடம் இல்லை , இருந்தாலும் தற்போது வேற்று சமுதாய மக்களின் பார்வைக்காக மஞ்சள் நாணை தற்போது அணிந்து கொள்கிறார்கள் . பெரும்பாலான இடங்களில் மணமகன் தாலி கட்டுவது கிடையாது , அத்தை , நாத்தனார் போன்ற பெண்களே மணமகளுக்கு தாலி கட்டி விடுகிறார்கள். இரவு முழுவதும் தேவராட்டம் தவறாமல் நடைபெறும் , சேவயாட்டம், கும்மி போன்றவையும் இரவு முழுவதும் நடத்துவர்.
அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, மணமகன் மணமகளின் காலில் மெட்டி இடுவது போன்ற எந்த சடங்கும் இவர்களிடம் இல்லை . பெண்ணுக்கு ”ஆசாரி” தான் மெட்டி இடுவார். மணமகன் காலில் மெட்டி இடும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. திருமணத்தின் போது "வீர வாளை" மணமகன் ஒன்றைக் கையில் வைத்திருப்பார். பெண் தலைக்கு முக்காடு போட்டு கொண்டு இருப்பார், மணமகனுக்கு மார்பில் கவசம் கட்டுவர், தலையில் கங்கணம், எருக்கம் பூ, வேப்பம் பூ போன்றவற்றை கட்டுவர். மணமகன் தலைப்பாகை கட்டி கொண்டும், கவசம் அணிந்து கொண்டும் இருப்பார். பெண் மண்ணால் ஆன குடத்தை தலையில் வைத்திருப்பார். இது இவர்களின் திருமணம் முடியும் வரை கடைப்பிடிக்கும் முறை.[5]
இது சடங்குகளுக்கான நாள். கம்பளத்து சமுதாய மக்களின் திருமணங்களில் சடங்குகள் நிறைந்ததாக இருக்கும் .
தளவாலு அட்டந்து
ஊரில் உள்ள உறவினர்கள் , சொந்த பந்தம் அனைவரும் மணமக்களுக்கு ஆசி வழங்கும் சடங்கு. ஒரு தட்டில் பால் வெய்து அதனை வெற்றிலை மூலம் தொட்டு மணமக்களின் மேல் தொட்டு உறவினர்கள் ஆசி கொடுப்பார் . இந்த சடங்கு செய்யும் பொது தெலுங்கு மொழியில் தங்கள் குல பெருமைகளையும் , தங்கள் வரலாறுகளையும், தங்கள் குல வீரர்களையும் , தங்கள் குலத்துக்கு உதவி செய்த மற்ற இனத்தவரையும் புகழ்ந்து பாடுவர்.
தேவுடு மொக்கந்து - கடவுளை வணங்குவது
இந்த சடங்கில் தங்கள் குல தெய்வங்களையும் , முனோர்களையும் உரிமையோடு அழைப்பர் . இவர்களின் நம்பிக்கை படி தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் , தாங்கள் சொன்னால் பழிக்கும் என்றும் , தாங்கள் அழைத்தால் கடவுளே வருவர் என்று கூறி உரிமையோடும், அதிகாரத்தோடும் கடவுளை அழைத்து மணமக்களை வாழ்த்த சொல்வர் .
குச்சிலு போந்து- குடிலுக்கு செல்வது
மரங்களால் வேயப்பட்ட குடிலில் மணமகன் , மணமகளுக்கு விளையாட்டு முதலிய வற்றை செய்து உற்சாக படுவர் . பரிசு பொருள்களை பிறருக்கு கொடுத்து மகிழ்வர் . இவர்களின் திருமணம் ஆதி மக்கள் செய்த முறையில் நடக்கும் .
இவர்கள் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபாடு செய்வதால் திருமண விருந்து பெரும்பாலும் சைவ உணவு வகைகளைக் கொண்டிருக்கும்.
நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம் பார்க்கும் முறை எதனையும் இம்மக்கள் செய்வது இல்லை. இதுபோல் திருமணம் பகல், இரவு என அவர்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். மணமக்கள் தங்கள் இனத்தில் காதல் செய்தால் அதனை இவர்கள் ஏற்று கொள்கிறார்கள். பிற சாதிகளில் காதல் கொண்டால் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன் அவர்கள் இறந்து விட்டதாகக் கொண்டு இறந்தவருக்குச் செய்யும் சடங்குகளைச் செய்து அவர்களை ஒதுக்கி விட்டுவிடும் வழக்கமும் உள்ளது.[சான்று தேவை]
- இவர்கள் திருமணம தொடக்க காலத்தில் ஓராண்டுமுழுவதும் நடைபெற்றதாகவும் அது படிபடியாக குறைந்து ஒருநாள மட்டும் நடைபெறுவதாகக் தேனிமாவட்டத்தில் உள்ள காப்பு மக்களிடையே செவி வழி செய்யும் உண்டு. [சான்று தேவை]
- இவர்களின் திருமணத்தில் வரதட்சணை கிடையாது. [2]
- மணமகன் வீட்டினர்தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர்
- பழைய பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
- மணமகன் மணமகளுக்கு காசு கொடுத்துதான் திருமணம் செய்ய முடியும் .
- கம்பளத்து நாயக்கர்கள் பிராமணர்களைக் கொண்டு திருமணம் செய்வது இல்லை, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுவதில்லை என்பதையும் சாதி வினோதங்கள் என்ற பாரதியாரின் கட்டுரையிலே குறிப்பிடுகிறார்.
இவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. இதற்கு இவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள்தான் காரணமாக இருக்கிறது. இவர்கள் குழந்தைகளுக்கு குல தெய்வப் பெயரை முதல் பெயராக வைத்துக் கொள்கின்றனர். வெளிப்பழக்கத்திற்கென புதுப் பெயர்களை இரண்டாம் பெயராக வைத்துக் கொள்கின்றனர்.
குழந்தை பிறந்த மூன்றாம் மாதத்தில் ஊஞ்சல் ஆட்டம் எனும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதில் குழந்தைகளில் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக குலப் பெருமை, வீரக்கதை போன்றவற்றை தெலுங்கில் பாடலாகப் பாடுகிறார்கள். குழந்தைக்கு ஒரு வயதில் மொட்டை இடும் பழக்கம் பிற சாதியினரைப் போல் இவர்களிடமும் உள்ளது. குல தெய்வக் கோவிலுக்கு சென்று ஆடு, சேவல் பலியிட்டு, பொங்கல் வைத்து, குழந்தைக்கு மொட்டையிட்டு, குழந்தையின் தாய் மாமனைச் சிறப்பித்து அவருக்குக் கப்பம் பணம் செலுத்தி அதன் பிறகு தெய்வ வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
சுடுகாடு வரையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது . இதற்கு பல காரணம் சொல்கிறார்கள் அக்கால கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களால் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்ததாலும், பெண்களை மதித்து அவர்களும் சுடுகாடு வரை வரலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இவர்களின் உடல் எரிக்கப்படும். இறந்த மூன்றாம் நாள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நடுக்கல் நடுகின்றனர். இந்த நடுக்கலில் அவரின் பெயர், பிறந்த மற்றும் இறந்த நாள் குறித்த தகவல் அவர்கள் செய்த சாதனை போன்ற தகவல்களும் இடம் பெறுகிறது.[சான்று தேவை]
பிற சாதிகளில், இறந்தவர்களின் பிள்ளைகள் மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இவர்களிடம் இவ்வழக்கம் இல்லை. அதே போல இறப்பு நிகழ்வில் பெரும்பாலும் இவர்கள் அழுவது கிடையாது. சக்கிலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இம்மக்களின் இறப்பில் வந்து ஒப்பாரி வைத்து அழுவர்.[6] தற்போது இந்த நடைமுறை மாறி வருகிறது. அதே போல இவர்களின் இறுதி ஊர்வலம் மிக ஆடம்பரமாக நடக்கும் , பறை மேளம், உருமி, உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்க, முன்னே பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், போன்றவை ஆடிக்கொண்டு இறப்பு நிகழ்ச்சியை கூட இம்மக்கள் விமரிசையாக நடத்துவர். இறப்புக்கு மொய் எழுதும் வழக்கம் இவர்களிடம் உள்ளது.
இவர்கள் 1850 களில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தெலுங்கு மொழி பேசுபவர்களில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளனர் .[சான்று தேவை]குறிப்பாக மதுரை,திண்டுக்கல்,தேனி,விருதுநகர்,தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மக்கள் தொகையில் பெருமளவில் இருந்து வருகின்றனர் . மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்டவர்களாக காப்பு இனத்தவர்களான தொட்டியர் , கப்பிளியர், கவரை மட்டுமே இருந்துவருகின்றனர் .[6] அதே போல சேலம், ஆத்தூர், கடலூர், நாமக்கல்,கோவை, கரூர்,திருச்சி,ஈரோடு ,திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர் . இதுமட்டும் அல்லாது திருநெல்வேலி,ராமநாதபுரம் போன்ற இடங்களிலும் தமிழகம் முழுவதுமே இவர்கள் வாழுகிறார்கள்.[7] .இவர்களின் கிளை சாதியனரான பலிஜா ,கவரா ,காப்பு போன்றவற்றையும் சேர்த்து மக்கள் தொகை கணக்கெடுத்தால் இவர்கள் தமிழகத்தில் பெரிய மக்கள் தொகை கொண்டு இருப்பர்.[சான்று தேவை]
ராஜகம்பளம் சாதியினர் தங்களின் குல தெய்வங்களாக கீழ்காணும் தெய்வங்களை வழிபடுகின்றனர்.
- இர்ரி காணி-கெண்டு காட்டம்மா
- கொடையானி பொம்மு-பேரவாடி அக்ககாரு
- காடேரி பொம்மு -ஏறதம்மைய , பொம்மைய,
- குஜ்ஜபொம்மு-வெல்லக்குஞ்சர பொம்மையசாமி
- கம்பராஜு-ரங்கநாதர்
- எரமாசி -காமாட்சியம்மன்
- மங்கராஜு-கெட்டவைய்ய
- கலிமிசோமு-டத்தலூட்டி கண்ணகாரு
- பல்லகாணி-லகுவம்மா
- குரிமாசி-பைட்டம்ம
- சில்லண்ண-சீப்பாலம்ம
- தொழுவ நாயக்கர் - பெரியாச்சி
இவ்வாறாக இவர்கள் குல தெய்வங்களை வழிபட்டாலும் ஜக்கம்மா தேவி, பொம்மக்கா போன்ற தெய்வத்தினை சாதியின் பொது தெய்வமாகக் கொண்டுள்ளனர்.ராஜகம்பளம் இனத்தில் உள்ளவர்கள் அனைவருமே வைணவ கோத்திரத்தை உடையவர்கள் . இருந்தாலும் சைவ வழிபாடு , குலதெய்வ வழிபாடுகளை செய்வர் . அனுப்பகவுண்டர் இன பொது தெய்வம் ஒன்னம்மாள் தொட்டராயர் ஆகும் மேலும் குல தெய்வங்கள் உத்தண்டராயர் அழகர் மாலமுத்து பொம்மையசாமி பொம்மக்காள் பொன்னர்சங்கர் கருப்பராயன் கொண்டம்மாள் கொண்டப்பன் கொண்டத்துகாளி கொண்டுராம் வையம்மாள் சங்கையாசாமி நாகம்மாள் ஆகும்
இந்த சாதியினர் ஒரு குழுவாகத் தங்களுக்கென ஒரு பகுதியை உருவாக்கிக் கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தனர். இதனால் இவர்கள் பிற சாதியினரை தங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். இச்சாதிப் பெண்களை மாத விலக்கு காலத்தில் ஊரின் ஒரு பகுதியில் தனியாகத் தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் இச்சாதியினரிடம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள் அக மண முறையை தீவீரமாகப் பின்பற்றுகின்றனர்.
தமிழில் வழங்கும் பல நூல்களில் குறிப்பாக குறுதெய்வ வழிபாடுகளில் கம்பளத்து மக்களின் பெருமைகள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கம் பொறிக்கப்பட்டுள்ளன . குறிப்பாக கொங்குநாட்டில் வழங்கப்படும் பொன்னர் சங்கர் உடுக்கை அடி பாடல்களில் கம்பளத்தார் மக்களின் பெருமைகளை அறியலாம் .[8] அதே போல காத்தவராயன் கதையில் வரும் சின்னானும் தொட்டியர் இனத்தவர் அவர் தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்தால் அவரை கொலை செய்துவிடுகின்றனர் .[9] அதே போல சக்கிலியர் இனத்தை சேர்ந்த மதுரை வீரன் கம்பளத்து இன பெண்ணான பொம்மியை காதலித்தால் அவரை திருமலை நாயக்கர் கொலைசெய்து விடுகிறார் .[10]
தேவராட்டம்[தொகு]
இச்சமுதாயத்தினர் தேவராட்டம் எனும் ஒரு வகை நடனம் ஆடுகின்றனர். இவர்கள் வீட்டு விழாக்களில் இந்த நடனம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.இதுதவிர சேவயாட்டம் அல்லது சேர்வை ஆட்டம்
, எக்காளக் கூத்து, கும்மியாட்டம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.[11]
தமிழ்நாட்டில் குடியேறிய ராஜகம்பளம் இனத்தினை சேர்ந்தவர்கள் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டு இருக்கும் இனத்தவர்கள் , இவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில் தங்களோடு ஒரு வகையான வேட்டை நாய்களை கொண்டு வந்தனர் . இவர்கள் அதிக அளவில் இராஜபாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிப்பிப்பாறை என்னும் ஊரில் இருந்து வந்ததால் இவர்கள் வளர்க்கும் நாய் ராஜபாளையம் நாய் என்று அழைக்கபடுகின்றது . இந்த வகையான நாய்கள் வேட்டைக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தபடும் . இந்த வகையான நாய்கள் தமிழ்நாட்டில் புகழ் அடைந்த ஒரு வகையான நாய் இனத்தினை சேர்ந்ததாக கருதபடுகிறது .[12][13]
- மதுரை நாயக்கர்கள்[சான்று தேவை]
- வீரபாண்டிய கட்டபொம்மன்- சுதந்திர போராட்ட வீரர்
- ஊமைத்துரை-
கட்டபொம்மனின் தம்பி மற்றும் விடுதலை வீரர்
- விருப்பாச்சி கோபால
நாயக்கர்-
பாளையகார் படை அமைத்து ஆங்கிலேயரை எதிர்த்தவர் .
- எட்டப்ப நாயக்கர் - தமிழ்ப் பற்று கொண்டவர்[சான்று தேவை]
- ஒன்னம்மாள் தொட்டராயர் - விஜயநகர பேரரசில் தென்னாட்டை நீதியுடனும். நேர்மையுடனும், தெய்வீக சக்தியுடனும் ஆண்டு பல விருதினை பெற்றவர்கள். குறிப்பாக ராயர் .பாண்டியர் ஆகிய பட்டம். {(பொட்டிய தொட்டய்யன் ஒன்னுக்கை ராமு]இவர் பெரும் மாவீரனாவார் யாராலும் வெல்லமுடியாத வானாதிராயனையே வென்று வானாதிக்கோட்டையை பரிசாகப் பெற்றவர் இவர் ஒன்னம்மாள் தொட்டராயரின் புதல்வர் ஆகும். இவர்கள் ராஜகம்பள அல்லிகுல அனுப்பகவுண்டர் வம்சமாகும் ,மதுரை கள்ளழகர் ஆபரணங்களை மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை பாதுகாத்து வருவது வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் அனுப்பக்கவுண்டரே ஆகும்[சான்று தேவை]
அரசியல்[தொகு]
- விஜயகாந்த் – தே.மு.தி.க தலைவர்[சான்று தேவை]
- க.சுப்பு - முன்னாள் அமைச்சர்
- விடுதலை களம் - தொட்டிய நாயக்கர்களுகான கட்சி
- கம்பளத்தார் சத்ரியர் சங்கம் - கம்பளத்தார் சமூக முன்னேற்ற சங்கம் .
- நாயக்கர் நாயுடு பேரவை[14][15]