பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டு பெறுவது எப்படி?
தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் விதிடிராவ் போன்ற காரணங்களுக்குக் கட்டாயமாக உள்ளது.
அது மட்டும் இல்லாமல் 10 இலக்கம் கொண்ட இந்தப் பிளாஸ்டிக் பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும்.
இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. எனவே பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
உங்களுடைய பான் கார்டு என் மறந்துவிட்டால் வருமான வரித் துறை இணையதளத்தில் உள்ள ‘Know Your PAN’ என்ற சேவை மூலமாகப் பான் விவரங்களைப் பெற முடியும்.
வருமான வரி இணையதளத்தில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/VerifyYourPanDeatils.html என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.
பின்னர் ‘verify your PAN’ என்ற படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும். இங்கு தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களது பான் எண்ணை எளிதாகப் பெறலாம்.
பான் எண் தெரியவந்த உடன் டூப்ளிகேட் பான் கார்டுக்கான கோரிக்கையை சமர்ப்பித்து புதிய கார்டை பெறலாம்.
தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment