Thursday, 22 November 2018

அங்கியோ காடியோ கிராம் என்றால் என்ன? ஏன் செய்வது?

அங்கியோ காடியோ கிராம் என்றால் என்ன? ஏன் செய்வது?


அஞ்சியோ என்றால், குருதி குழாய்கள் சம்பந்தமானது, காடியோ என்றால் இதயம் சம்பந்தமானது, கிராம் என்றால் அதைபற்றின (பட) விபரம். இதயதிர்ற்குரிய குருதி குழாய்களை படம் பிடித்தல். ஒரு விதமான "X ரே" குருதி குழாய்களை படம் பிடிக்கும்.


என்னவென்று செய்வது என்றால், தொடையில் உள்ள குருதி குழாய் ஊடக குழாய் ஒன்றை செலுத்தி (கதீட்டர்) இதயத்தின் பெருநாடி ஊடக இதயத்துக்கு குருதி வழங்கும் இதய நாடிகளை அடைந்தவுடன், ஒருவிதமான "டை" ஒன்றை செலுத்தி "X ரே" படம் பிடிக்கிறது. இதயத்திற்கு குருதி வழங்கும் இதய நாடிகளில் அடைப்புக்கள் இருந்தால், அந்த "X ரே" இல் குறிப்பிட்ட பகுதிகளுரிய விம்பம்/ படம் வராது. இதிலிருந்து எந்த எந்த குழாய் அடைபட்டுள்ளது/ சுருங்கியுள்ளது என்று பார்க்கலாம்.


அப்படி எங்காவது சுருங்கி/ அடைப்பு இருந்தால் 'ஸ்டேன்ட்" போடுவாரர்கள், அது அந்த குழாயை அடைப்பில்லாமல் போன உதவும்.


அப்ப யார் யாருக்கு செய்வது?


கூடின வகையில், ஹார்ட் அட்டாக், அல்லது அஞ்சின நெஞ்சு வருத்தம் உள்ளவர்களுக்கும், unstable angina, உள்ளவர்களுக்கும் செய்வது. எல்லோருக்கும் செய்வதில்லை, (எல்லா நெஞ்சு வலி காரருக்கும்) ஒன்று தேவையில்லை, மற்றது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை, (கிட்டடியில் நான் நினைக்கிறன் 1 - 2 வருடத்திற்கு முன் யாழிலும் ஒரு "கத்லப்" (இதை செய்கிற இடத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) திறந்து வைத்தவர்கள்) ,மற்றது எல்லா மருத்துவ துறையில் உள்ள முன்னேற்றங்கள் போல இதனாலும் சில பக்க விளைவுகள் உண்டு


No comments:

Post a Comment